என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அங்காள பரமேஸ்வரி அம்மன்
நீங்கள் தேடியது "அங்காள பரமேஸ்வரி அம்மன்"
ஆவடி அருள்மிகு சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நாளை மறுநாள் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய பிரார்த்தனை தலம் இதுவாகும்.
இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. விளம்பி வருடம், மாசி மாதம் 29-ம் நாள் நாளை மறுநாள் 13.3.2019 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்ளாக ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் மற்றும் மாரிதாஸன் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பபிஷேக விழா 9-ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று காலையில் நவகிரஹ ஹோமம் அக்னி ஸங்கிரஹனம், தீர்த்த சங்கரஹணம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மஹாதீபாராதனை நடைபெற்றது.
நாளை 12-ம் தேதி விசேஷசந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் விசேஷசந்தி, பாவனாபிஷேகம், வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, 1008 தாமரை புஷ்பத்தால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரஜதபந்தன சாற்றுதல், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, நாடீசந்தானம், தத்வார்ச்சனை, நாமகரணம், நவகுண்ட பட்டுபுடவை வஸ்திர சமர்ப்பணம், ஜயாதி ஹோமம், க்ரஹப்ரீதி யாத்ரா ஹோமம், யாத்ராதானம், கலச புறப்பாடு, மூலஸ்தான விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், சுயம்பு அம்பாளுக்கு மற்றும் சப்த கன்னிகைக்கும் மூலஸ்தான அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மூலவர் அங்காளம்மனுக்கும், மாரியம்மன் கோவிலின் குருவாயூரப்ப குருக்கள் தலைமையில் அரவிந்த் குருக்கள் உள்பட 23 பேர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் சமயபுரம் மற்றும் திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூஜகர் சிவகுமார், சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

×

X